கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் முகாம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வருகின்ற 28.03.2023 அன்று நடைபெறவுள்ளது. இச்சிறப்பு முகாமில் முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட தொழில் பொது மேலாளர், வட்டாட்சியர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளின் மனுக்களின் மீது மாவட்ட ஆட்சியர் ஆணையின் பேரில் தீர்வு அளிக்க உள்ளனர்.
