திருத்தணி முருகன் மலைக் கோயிலில் குரங்கு தொல்லை; பக்தர்கள் தவிப்பு

திருத்தணி: திருத்தணி முருகன் மலைக்கோயிலில் குரங்குகள் தொல்லை கொடுப்பதால் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலுக்கு தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் பக்தர்கள் வருகை தருகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள், கார், வேன், பைக் உள்ளிட்ட வாகனங்களிலும் நடந்தும் மலைக்கோயிலுக்கு தரிசனம் செய்ய செல்கின்றனர். மலைக்கோயில் வளாகத்துக்கு வாகனங்கள் செல்லும் பாதை மற்றும் நடந்துச்செல்லும் பாதையில் குரங்குகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.

படிக்கட்டு மற்றும் சாலையில்சுற்றித்திரியும் குரங்குகள் திடீரென்று ஓடிவந்து பக்தர்கள் பூஜைக்காக கொண்டு செல்லும் பழம், தேங்காய் உள்ளிட்டவற்றை பறித்து தப்பிச்சென்று விடுகிறது. மலைக்கோயில் இருந்து வாங்கிக்கொண்டு செல்லும் பிரசாதங்களையும் குரங்குகள் அபகரித்து கொண்டு சென்று விடுகிறது. இதனால் குரங்குகளை பார்த்ததும் பக்தர்கள்அதிர்ச்சி அடைகின்றனர். தங்களது பொருட்களை பாதுகாக்க கடும் பாடுபடுகின்றனர்.

இதுபற்றி பக்தர்கள் கூறுகையில்:

திருத்தணி முருகன் மலைக் கோயிலில் குரங்குகள் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கோயில் வளாகம், பக்தர்கள் நடந்து செல்லும் பாதையில் அமர்ந்துகொண்டு பூஜை பொருட்கள், பிரசாதங்களை பறித்து சென்றுவிடுகிறது. எனவே, குரங்குகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். குழந்தைகள் பயப்படுகின்றனர். எனவே, குரங்குகளிடம் இருந்து பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்றனர்.

Related Stories: