தூத்துக்குடி ஆவின் உதவி பொதுமேலாளர் திடீர் சஸ்பெண்ட்

தூத்துக்குடி: தமிழ்நாடு கூட்டுறவு ஆவின் பால் உற்பத்தியாளர் சங்க நெல்லை உதவி பொதுமேலாளராக பணி புரிந்தவர் ரெங்கநாததுரை. இவர் சில மாதங்கள் நெல்லை ஆவின் பொதுமேலாளர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடி ஆவின் பால் கூட்டுறவு சங்க உதவி பொதுமேலாளராக இடமாறுதல் செய்யப்பட்டார். அவர் வருகிற 31ம் தேதி ஓய்வு பெறும் நிலையில் திடீரென சஸ்பெண்ட் செய்து, ஆவின் நிர்வாக இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். நெல்லை மாவட்ட ஆவின் கூட்டுறவு சங்கத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக ரெங்கநாததுரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: