ஜம்முவில் அரசு குறித்து சமூக ஊடகங்களில் விமர்சிக்க அரசு ஊழியர்களுக்கு தடை

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் அரசை பற்றி சமூக ஊடகங்களில் விமர்சனம் செய்யும் அரசு ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜம்மு பொதுநிர்வாகத்துறை ஆணையர் செயலர் சஞ்சீவ் வர்மா வௌியிட்டுள்ள அறிக்கையில், “ஜம்மு காஷ்மீர் ஊழியர் நடத்தை விதிகள் 1971ல் புதிய விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அதன்படி, ஜம்மு காஷ்மீர் அரசு குறித்தும், அரசின் திட்டங்கள், செயல்பாடுகள், நடவடிக்கைகள் குறித்தும் முகநூல், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் விமர்சிக்கவோ, விவாதிக்கவோ கூடாது. இதேபோல், அரசியல் தொடர்பான, மதசார்பற்ற அல்லது மதஎதிர்ப்பு கருத்துகளை பதிவிடவோ, அதுதொடர்பான விவாதங்களில் பங்கேற்க, விமர்சிக்க கூடாது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் கண்காணிக்கப்பட்டு, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: