தென்மண்டலத்தில் கடந்த 79 நாட்களில் 750 கஞ்சா குற்றவாளிகளிடம் நன்னடத்தை பிணைய பத்திரம்: ஐஜி அஸ்ரா கார்க் தகவல்

மதுரை: மதுரை உட்பட தென்மாவட்டங்களில் கஞ்சா விற்பனையால் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வந்தது. இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஐஜி அஸ்ரா கார்க் உத்தரவின்பேரில் டிஐஜிக்கள் மற்றும் எஸ்பிக்கள் தலைமையில் முதற்கட்டமாக கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் கும்பலை கண்டறிந்து கைது செய்து, சிறைகளில் அடைத்தனர். அதனைத்தொடர்ந்து, அவர்களின் வங்கிக்கணக்கு மற்றும் சொத்துக்கள் மற்றும் அவரை சார்ந்த உறவினர்களின் சொத்துக்களை முடக்கம் செய்தனர். இதனால் தென்மாவட்டங்களில் கஞ்சா விற்பனை முற்றிலும் குறையத் தொடங்கியது. இந்நிலையில், தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘தென்மண்டலத்தில் 10 மாவட்டங்கள் மற்றும் நெல்லை நகரில் நடப்பாண்டில் ஜனவரி முதல் மார்ச் 20ம் தேதி வரை உள்ள 79 நாட்களில் 750 கஞ்சா குற்றவாளிகளிடம் நன்னடத்தைக்கான பிணைய பத்திரம் பெறப்பட்டுள்ளது. கஞ்சா விற்பனையை முற்றிலும் ஒழிக்க தொடந்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

Related Stories: