திருவலங்காடு ஒன்றியத்தில் விவசாயிகள் சிறப்பு முகாம்

திருத்தணி: முதலமைச்சர் மு. க ஸ்டாலின்  தமிழ்நாடு அரசு அனைத்து திட்ட பயன்களையும் ஒற்றை சாளர முறையில் விவசாயிகள் பயன்பெற வேளாண் அடுக்கு திட்டம் அறிவித்தார். இந்த திட்டத்தில் பயனடையும் விவசாயிகள் ஆதார் அட்டை நகல் ,ஸ்மார்ட் கார்டு நகல், வங்கி பாஸ் புத்தகங்கள், பட்டா நகல், விவசாயிகளுடைய பாஸ்போர்ட் புகைப்படம் ஒன்று மற்றும் தங்களுடைய செல்பேசி எண் ஆகிய ஆவணங்களை சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களிடம் வழங்கி பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். அதன்படி திருத்தணி வட்டம் திருவலங்காடு ஒன்றியம் நாபலூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் நேற்றுமுன்தினம்  சிறப்பு முகாம் நடந்தது.

இந்த முகாமில் விவசாயிகளிடம்  இருந்து பதிவு செய்து கொள்ள மனு பெறப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கிராம நிர்வாக அலுவலர் பொறுப்பு ரகுவரன் தலைமை தாங்கினார். தோட்டக்கலைத்துறை அலுவலர் ஐயப்பன் அனைவரையும் வரவேற்று பேசினார்.  இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் வேதாச்சலம் (எ) பெருமாள் விவசாயிகளிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில், நாபலூர் மற்றும் குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 25 விவசாயிகள் பங்கேற்று மனுக்கள் வழங்கினர்.  இதில், திமுக பிரமுகர்கள் குமார் மகாதேவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: