கோலப்பஞ்சேரியில் ஊராட்சி அலுவலக கட்டிடம் 2 அங்கன்வாடி மையம்: ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ திறப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி ஒன்றியம், கோலப்பஞ்சேரி ஊராட்சியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் 19.72 லட்சம் மதிப்பில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், 18.16 லட்சம் மதிப்பில் 2 அங்கன்வாடி மையங்கள், ஜெ.ஜெ.எம்.திட்டத்தில் 13.50 லட்சம் மதிப்பில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 11.80 மதிப்பில் சிமெண்ட் சாலை ஆகியவை திறப்பு விழா நடைபெற்றது.

விழாவிற்கு ஒன்றியச் செயலாளர் ப.ச.கமலேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் எம்.ராம்குமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீபிரியா, ஒன்றிய கவுன்சிலர் சு.சிவகாமி சுரேஷ், துணைத் தலைவர் நரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் சி.விஜயபாபு வரவேற்புரை ஆற்றினார். விழாவிற்கு பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி தலைமை தாங்கி ஊராட்சி மன்ற அலுவலகம், 2 அங்கன்வாடி மையங்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, சிமெண்ட் சாலை ஆகியவற்றை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

இதில் திமுக பொதுக்குழு உறுப்பினர்கள் எம்.முத்தமிழ்ச் செல்வன், வி.குமார்,  ஒன்றிய நிர்வாகிகள் டி.அண்ணாமலை, ஏ.ஜனார்த்தனன், எம்.இளையான், ஆர்.பிரபாகரன், ஏ.ஆர்.பாஸ்கர், எஸ்.புகழேந்தி, வி.பி.பிரகாஷ், எம்.ராஜாராம், குமரேசன், எம்.ராம்பாபு, பரிமேலழகர், ஊராட்சி மன்ற தலைவர்கள் பாரிவாக்கம் வே.தணிகாசலம், வயலாநல்லூர் துரைமுருகன், கிளை செயலாளர் எஸ்.ஆனந்த், ஜெய்சங்கர், குப்பன், மகேந்திரன், வார்டு உறுப்பினர்கள் ஹரீஷ்குமார், யோகேஸ்வரி திருவேங்கடம், சுரேஷ்குமார், காமாட்சி பிரபாகரன், பிரமிளா சேட்டு, ஊராட்சி செயலர் நாகராணி கபில்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: