ராகுல்காந்திக்கு சிறை தண்டனை விதித்ததை கண்டித்து காங்கிரசார் சாலை மறியல்

செங்கல்பட்டு:  ராகுல்காந்திக்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்ததை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில், பங்கேற்ற காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி, பிரதமர் மோடி குறித்து அவதூறு பேசியதாக பாஜ சார்பில் வழக்கு தொடரப்பட்டது.  வழக்கை விசாரித்த சூரத் நீதிமன்றம், ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை அளித்து நேற்று தீர்ப்பு கூறியது. இந்நிலையில், நேற்று ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர்  போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக செங்கல்பட்டு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சுந்தரமூரத்தி தலைமையில், கட்சியினர் 50க்கும் மேற்பட்டோர் பழைய பேருந்து நிலையத்தில் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். கொட்டும் மழையில் ஒன்றிய அரசு மற்றும் பிரதமர் மோடியை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இந்த சம்பவத்தால் செங்கல்பட்டு - தாம்பரம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், மறியலில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் வைத்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Related Stories: