ஓபிஎஸ்சுக்கு ஆதரவா? சசிகலா பேட்டி

நாகப்பட்டினம்: ‘ஓபிஎஸ்சுக்கு ஆதரவா’ என்பது குறித்து சசிகலா பரபரப்பு பேட்டி அளித்து உள்ளார். சென்னையில் இருந்து வேளாங்கண்ணிக்கு நேற்று வந்த சசிகலாவை அதிமுக ஓபிஎஸ் அணி நாகப்பட்டினம் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான நிர்வாகிகள் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர். சிறிது நேரம் வேளாங்கண்ணியில் உள்ள தனியார் ஓட்டலில் சசிகலா ஓய்வெடுத்தார். இதன்பின்னர் காரில் ஏறி திருவாரூர் சென்றார். அப்போது சசிகலா அளித்த பேட்டி: சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதற்கு எடப்பாடி அணியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சட்டசபை என்பது மக்கள் பிரச்னையை உறுப்பினர்கள் விவாதம் செய்யும் இடம். அந்த இடத்தில் மக்கள் பிரச்னைக்காக எந்த தீர்மானம் வந்தாலும் அதை மக்களுடைய பிரதிநிதியாக இருக்கிறவர்கள் தாராளமாக பேசலாம். இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது சரியில்லை. நான் (சசிகலா) இவ்வாறு கூறியது ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிப்பது என்று கூறமுடியாது. மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் சட்டசபைக்கு யார் வந்தாலும் அவர்களுக்கு பேசும் உரிமை உள்ளது. அதை தான் நான் கூறினேன். அதிமுக யார் கைக்கு சென்றால் நீடித்திருக்கும் என்பதை அதிமுக தொண்டர்களிடம் கேட்க வேண்டும். அவர்கள் சரியான பதில் கூறுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: