ஜாமீனில் வெளியே வந்த காதலனை பார்க்க விடாததால் 15வயது சிறுமி தற்கொலை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த கரடியூர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி, வீட்டில் இருந்து வந்தார். இவரும் பர்கூர் அத்திமரத்துப்பள்ளி கிராமத்தை சேர்ந்த உறவுக்கார வாலிபர் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் ஒன்றை அளித்தனர். அதில், அத்திமரத்துப்பள்ளியை சேர்ந்த உறவுக்கார வாலிபர் தங்கள் மகளிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிவித்திருந்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, அந்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கடந்த 17ம் தேதி அந்த வாலிபர் ஜாமீனில் வெளியே வந்தார். இதனை அறிந்த சிறுமி, அன்றைய தினம் அந்த வாலிபரை பார்க்க அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். ஆனால் அங்கிருந்தவர்கள் அனுமதி மறுத்ததால், தான் வைத்திருந்த விஷத்தை குடித்து அங்கேயே மயங்கி விழுந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

Related Stories: