ஆதிவராகபுரம் கிராமத்தில் பலவீனமடைந்து உடைந்து விழும் அபாயத்தில் மின்கம்பம்: கிராம மக்கள் அச்சம்

பள்ளிப்பட்டு: திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அருகே  ஆதிவராகபுரம் கிராமம் உள்ளது. இங்கு சுமார்  1000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள மக்களுக்கு மின்சார வாரியத்தின் மூலமாக மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், சோலிங்க சாலையில் இருந்து ஆதிவராகுபுரம் செல்லும் சாலையில் வீடுகளுக்கு அருகில் பலவீனமடைந்த மின்கம்பம் உள்ளது. இந்த, மின்கம்பம்  அடிப்பகுதியில் சிமெண்ட் பெயர்ந்து இரும்பு கம்பிகள் துருப்பிடித்து காட்சி அளிக்கிறது. இது எப்போது  உடைந்து அவ்வழியாக செல்லும்போது யார் மீதாவது  விழும் அபாயம் இருப்பதால் அப்பகுதி மக்கள் மற்றும் அந்த வழியாக சென்று வர அச்சமடைந்துள்ளனர்.

பல ஆண்டுகளுக்கு முன்பு  அமைக்கப்பட்ட இந்த  மின் கம்பம் என்பதால் பலவீனமடைந்துள்ளதாகவும், தெருவில்  சிறுவர்கள் விளையாடவும், முதியவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் இந்த வழியாக சென்று வர அச்சமடைந்து வருவதாகவும்.  பலமுறை மின்வாரிய அலுவலர்களுக்கு புகார் செய்யப்பட்டும், இதுவரை  நடவடிக்கை எடுக்கவில்லை என கிராமமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். காற்று., மழைக்கு  மின்கம்பம் உடைந்து விழும் அபாயம் இருப்பதால் இதனை அகற்றிவிட்டு,  புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும் என திருத்தணி செயற்பொறியாளருக்கு பொதுமக்கள் கோரிக்கையும் வைக்கின்றனர்.

Related Stories: