கும்மிடிப்பூண்டி ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் குடிதண்ணீர் சிக்கனமாக பயன்படுத்த தீர்மானம்

கும்மிடிப்பூண்டி:  கும்மிடிப்பூண்டியில் உள்ள  ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள்  நடைபெற்றது. கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் நேற்றுமுன்தினம் கிராம சபை  கூட்டம் நடந்தது. இதில்,  எகுமதுரை ஊராட்சி மன்ற தலைவர் ஸ்ரீபிரியா மகேந்திரன் தலைமையிலும், ஊராட்சி செயலாளர் சோபன்பாபு முன்னிலையிலும்  கிராம சபை கூட்டம் நடந்தது. அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் வழிமொழியப்பட்டு  உறுதிமொழி மற்றும் குடிதண்ணீர் சிக்கனமாக பயன்படுத்துவோம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கண்ணம்பாக்கத்தில் ஊராட்சி  தலைவர் சதீஷ் தலைமையிலும், துணை தலைவர் விக்னேஷ்குமார்,  ஊராட்சி செயலாளர் சதீஷ்குமார் முன்னிலையில்  நடந்தது. இதில், அனைத்து பகுதிகளும் குடிநீர் தங்கு தடையின்றி வழங்க வேண்டும் என பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.  

கீழ்முதலம்பேடு ஊராட்சியில் மன்ற தலைவர் கே.ஜி.நமச்சிவாயம் தலைமையிலும், துணை தலைவர் தேவி கஜேந்திரன்,  ஊராட்சி செயலாளர் சாமுவேல் முன்னிலையில்  குடிதண்ணீர் சிக்கனமாக  பயன்படுத்தவும்    தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  புதுகும்மிடிப்பூண்டியில் ஊராட்சி தலைவர் அஷ்வினி சுகுமாறன் தலைமையிலும், துணை தலைவர் எல்லப்பன், ஒன்றிய கவுன்சிலர்கள் மதன்மோகன், சீனிவாசன், ஊராட்சி செயலாளர் சிட்டிபாபு முன்னிலையில் பழுதடைந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை அகற்றிவிட்டு, புதிய சுகாதார நிலையம் அமைக்கவும், அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி கேமரா வைக்கவும், கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் சிப்காட் செல்லும் பொதுமக்கள் நடை மேம்பாலம் அமைக்கவும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

எஸ். ஆர். கண்டிகை ஊராட்சி தலைவர் ரேணுகா முரளி தலைமையிலும், ஊராட்சி செயலர் கர்ணன் முன்னிலையில் நடந்தது. இதில், தொழிற்சாலைகளில் ஊராட்சி அனுமதி இல்லாமல் போர் போடக்கூடாது, தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கரும் புகை கட்டுப்படுத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பெரிய ஓபுளாபுரத்தில் ஊராட்சி தலைவர் செவ்வந்தி மனோஜ், துணை தலைவர் ஜி.இன்பவள்ளி, ஒன்றிய கவுன்சிலர் மணிமேகலை கேசவன்,  ஊராட்சி செயலாளர் குருமூர்த்தி முன்னிலையிலும் மேற்கண்ட ஊராட்சியில் அடிக்கடி மின்னழுத்தம் காரணமாக மின்சாரம் தடை ஏற்படுகிறது. எனவே, சீரான மின்சாரம் வழங்க சரி செய்ய வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சாணபுத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் அம்பிகா பிர்லா தலைமையில் கூட்டம்  நடந்தது. சாணபுத்தூர் பகுதி சுடுகாடு செல்லும் சாலையில் சிமெண்ட் சாலை அமைக்கவும், ஊராட்சியில் உள்ள அரசு நிலத்தில் உள்ள மரங்களை அகற்றி, ஏழை மக்களுக்கு நிலம் வழங்கி பட்டா வழங்கவும், 2016-2019 வழங்கப்பட்டுள்ள தொகுப்பு வீட்டில் முறைகேடு என இருந்த நிலையில் தற்போது அனைத்து வீடுகளும் மக்கள் பயன்பாட்டில் உள்ளது  என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பண்பாக்கம் ஊராட்சி தலைவர் கே.எஸ் சீனிவாசன் தலைமையில் ஊராட்சி செயலாளர் சுகுமார் முன்னிலையில் ஆதிதிராவிடர் பகுதியில் உள்ள புதிய நீர்த்தேக்க தொட்டி அமைக்கவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கண்ணன்கோட்டை ஊராட்சி தலைவர் கோவிந்தசாமி தலைமையில் அப்பகுதியில், அங்கன்வாடி புதிய கட்டிடம் கட்டட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாதர்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன் தலைமையில் கூட்டம் நடந்தது. இதில், ஊராட்சியில் உள்ள பன்றிகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதை தவிர்க்கவும் உடனடியாக, ஊராட்சியில் இருந்து பன்றிகளை அகற்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநெல்லூரில் ஊராட்சி மன்ற தலைவர் லாரன்ஸ் தலைமையிலும் பா. செ. குணசேகரன் முன்னிலை சிப்காட் வருவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தேர்வாய் ஊராட்சி தலைவர் முனிவேல், துணைத் தலைவர் அருள் தலைமையில் ஊராட்சி செயலாளர் முர்த்தி முன்னிலையில் நடைபெற்றது. பெத்திகுப்பம் ஊராட்சி தலைவர் ஜிவா செல்வம், துணை தலைவர் குணசேகரன், ஊராட்சி செயலாளர் செல்வம் முன்னிலையில் நடைபெற்றது. பெருமாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜசேகர் தலைமையிலும், புதுவயல் ஊராட்சி மன்ற தலைவர் அற்புத ராணி தலைமையில், ஏ. என். குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் அம்மு விநாயகம் தலைமையில் நடைபெற்றது. ஈகுவார்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் உஷா தர் தலைமையிலும் நடைபெற்றது.

Related Stories: