சென்னை கடற்படை அதிகாரி ரயிலில் பாய்ந்து தற்கொலை: காரணம் என்ன? போலீஸ் விசாரணை

நாகர்கோவில்: சென்னை கடற்படை அதிகாரி ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  நாகர்கோவில் - திருருநெல்வேலி இடையிலான ரயில்வே தண்டவாளத்தில் நாங்குநேரி அருகே தலை துண்டான நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக நேற்று காலை நாகர்கோவில் ரயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் அருள் ஜெயபால் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இறந்து கிடந்தவருக்கு சுமார் 50 வயது வரை இருக்கும். அவர் யார்? என்பது பற்றி விசாரணை நடத்தினர். இறந்து கிடந்தவரின் சட்டை பையில் சோதனை செய்த போது அதில் ஒரு அடையாள அட்டை இருந்தது. அதன் மூலம் இறந்தவர், சென்னையை சேர்ந்த இஸ்ரேல் (54) என்பது தெரிய வந்தது.

உடனடியாக அதில் இருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட போது, இறந்த இஸ்ரேல் நாங்குநேரி அருகே உள்ள கடற்படையில் தீ தடுப்பு பிரிவு அதிகாரி  என்பது தெரிய வந்தது.  இவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் கூறப்படுகிறது.  இதற்கான காரணம் என்ன? என்பது தெரிய வில்லை. இது தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த இஸ்ரேல், உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இஸ்ரேல், குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சென்னையில் இருந்து நேற்று இரவு நாகர்கோவில் வந்தனர். அவர்களிடம் விசாரணைக்கு பின்னரே இஸ்ரேல் தற்கொலைக்கான காரணம் தெரிய வரும் என போலீசார் கூறி உள்ளனர்.

Related Stories: