மதுராந்தகம்: மேல்மருவத்தூர் ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தையொட்டி, கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தலைமையில் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஒன்றியம் மேல்மருவத்தூர் ஊராட்சியில் உலக தண்ணீர் தினம் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் வெ.லட்சுமி தலைமை தாங்கினார். துணை தலைவர் அ.ஆ.அகத்தியன் மன்ற உறுப்பினர் ப.ஸ்ரீதேவி ரமேஷ் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் செந்தில்குமார் அனைவரையும் வரவேற்றார்.
இந்த கூட்டத்தில் ஊராட்சியில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் சேமிப்பது குறித்தும், மாசுபடாமல் பாதுகாப்பது குறித்தும், வீணாவதை தடுப்பது குறித்தும் கலந்த ஆலோசிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகன், வேளாண்மை அலுவலர் ஜெகதீசன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்துகொண்டு அரசு திட்டங்கள் குறித்து பேசினர். இதனை தொடர்ந்து, அனைத்து வார்டு உறுப்பினர்கள் கிராம பொதுமக்கள் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் இளைஞர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், மழை நீரை சேமிப்போம், பெண் குழந்தைகளை பாதுகாப்போம், நெகிழி பயன்பாட்டை தவிர்ப்போம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இறுதியாக கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்றனர்.மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் பாப்பநல்லூர் ஊராட்சியில், ஊராட்சி மன்ற தலைவர் சத்தியவதி பலராமன் தலைமையில் உலக தண்ணீர் தினம் குறித்த கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில், ஊரக வளர்ச்சி துறை ஆணையர் மரு.தாரேஷ்அகமது பங்கேற்றார். கிராம சபை கூட்டத்தில், சுகாதாரத்தில் மேம்படுத்தப்பட்ட ஊராட்சி தீர்மானம் உட்பட 16 தீர்மானங்களை ஊராட்சி செயலாளர் காண்டீபன் கிராம சபையில் வாசித்து ஒப்புதல் பெற்றார்.மேலும், போதைப் பொருள் தடுப்பு மற்றும் உபயோகம் குறித்த விழிப்புணர்வு உறுதி மொழியும் ஏற்கப்பட்டது. தொடர்ந்து அப்பகுதியில் உள்ள இருளர் குடியிருப்புகளுக்கு ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில், உதவி இயக்குனர் மணியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அன்பரசு, ஞானப்பிரகாசம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், வட்டார ஒருங்கிணைப்பாளர் ரகுநாதன் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.