அரியலூரில் செந்துறை அருகே உள்ள வரதராஜபெருமாள் கோயிலில் திருடப்பட்ட சிலை 11 வருடத்துக்கு பின் மீட்பு..!!

அரியலூர்: அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள வரதராஜபெருமாள் கோயிலில் திருடப்பட்ட சிலை 11 வருடத்துக்கு பின் மீட்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கிறிஸ்டி அருங்காட்சியகத்தில் இருந்த ஆஞ்சநேயர் சிலை ஒன்று ஏலம் விடப்பட்டது. அந்த ஏலத்தில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒருவருக்கு சிலை விற்கப்பட்டது. அதை தொடர்ந்து அந்த சிலை திருடப்பட்ட ஆஞ்சநேயர் சிலை என தெரிய வந்தத நிலையில் அடுத்து நிபுணர்களின் உதவியுடன் ஆய்வு செய்யப்பட்டது. அந்த ஆய்வில் வரதராஜ பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான சிலை என கண்டறியப்பட்டது.

மேலும், ஆஞ்சநேயர் சிலையை மீட்க சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் நடவடிக்கை மூலம் சம்பந்தப்பட்ட நபர் சிலையை அமெரிக்க தூதரகத்தில் ஒப்படைத்தார். அமெரிக்க தூதரகம் மூலம் இந்திய தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், சிலை இந்திய தொல்லியல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. கோயில் சிலை திருடப்பட்டதாக 2012-ல் செந்துறை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுவரை 47 சிலைகள் மீட்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் உள்ள 65 சிலைகள் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: