ஜனநாயகத்தில் மோடிக்கு நம்பிக்கை இல்லை: கே.எஸ்.அழகிரி தாக்கு

சிதம்பரம்: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி சிதம்பரத்தில் நேற்று அளித்த பேட்டி: நாடாளுமன்றம் நடைபெறாமல் இருப்பதற்கு மோடி தான் காரணம். அவருக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை. சர்வாதிகாரிகள் இரண்டு வகை. ராணுவ ரீதியாக ஒரு சர்வாதிகாரம் உண்டு. தேர்தல் மூலம் வந்து சர்வாதிகாரர்களாக மாறி ஆட்சியை கைப்பற்றுவார்கள். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பாஜக தலைவர் அண்ணாமலை விரக்தியுடன் பேசுவதற்கு காரணம் உள் கட்சி விவகாரம் தான். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: