10 ஆயிரம் ஒருங்கிணைந்த பண்ணை தொகுப்பாளருக்கு ரூ.50 ஆயிரம் மானியத்தில் ரூ.50 கோடி நிதி

*பட்ஜெட்டிற்கு விவசாயிகள் பெருத்த வரவேற்பு

வலங்கைமான் : நேற்றைய தமிழக வேளாண்மை பட்ஜெட்டில் 10 ஆயிரம் ஒருங்கிணைந்த பண்ணை தொகுப்பாளர்களுக்கு ரூ.50 ஆயிரம் மானியத்தில் வரும் நிதியாண்டில் 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தமைக்கு விவசாயிகள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.தமிழக அரசு நேற்று தாக்கல் செய்த வேளாண்மை பட்ஜெட்டில் பயிர்களை வளர்ப்பதன் மூலம் மட்டுமே உழவர்களின் வாழ்க்கை உயர்ந்துவிட முடியாது ஆண்டுதோறும் பலன் தருகிற கறவை மாடுகள் தேவைக்கேற்ப விற்கக்கூடிய ஆடுகள் கோழிகள் மாடுகளுக்கு தீவனமாகும் தீவன பயிர்கள் ஊட்டச்சத்து ஆகின்ற பழமரங்கள் நெடுங்காலம் கழித்து முதலிடத்தைகளும் மரக்கன்றுகள் மலர்களில் மலர்ந்த சேர்க்க நடத்தியும் தேனீக்கள் வளர்ப்பு மண்ணை மக்கும் உரமாக மாற்றும் மண்புழு தயாரிப்பு அன்றாடம் உணவு சமைக்க உதவும் ஊட்டச்சத்து தோட்டம் பண்ணை குட்டைகளின் மீன் வளர்ப்பு போன்ற வேளாண்மை தொடர்பான பணிகள் அனைத்தையும் ஒரு குடையின் கீழ் மேற்கொள்வது ஊக்கப்படுத்துவது இன்றைய முக்கியமான தேவையாகும்.

இது நிலையான வருமானத்திற்கும் நீடித்த வருமானத்திற்கும் உதவுகின்ற ஒருங்கிணைந்த பண்ணையமாகும். இதை ஊக்குவிக்கும் வகையில் 50 ஆயிரம் ரூபாய் மானியத்தில் 10 ஆயிரம் ஒருங்கிணைந்த பண்ணை தொகுப்பாளர்களுக்கு ஆண்டில் 50 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என தமிழக அரசின் அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

இதுகுறித்து பாரதி கிஷான் சங்க மாவட்ட செயலாளர் பட்டம் சின்னத்துரை கூறுகையில், தமிழக  வேளாண்மை  பட்ஜெட்டில் பத்தாயிரம் ஒருங்கிணைந்த பண்ணை தொகுப்பாளர்களுக்கு ரூபாய் 50,000 மானியத்தில் வரும் நிதியாண்டில் 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு நன்றி. இந்த திட்டம் விவசாயிகளின் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். விவசாயம் மட்டுமல்லாது, விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு அரசு முழு ஆதரவு அளித்துள்ளது மிகவும் வரவேறகக்கூடியது என்றார்.

Related Stories: