கோடை சீசன் துவங்க உள்ள நிலையில் மலைப்பாதையில் வாகனங்களை முறையாக இயக்க வேண்டும்-டிரைவர்களுக்கு போலீசார் அறிவுரை

கோத்தகிரி : மலைப்பாதையில் ஏற்படும் வாகன விபத்துகளை தடுக்கும் வகையில் கோத்தகிரி மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் சக்கத்தா பகுதியில் சாலை போக்குவரத்து விதிமீறல் மற்றும் விதிமீறிய வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில் சமவெளிப் பகுதிகளில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா வாகனங்களே அதிக அளவு விபத்துக்குள்ளாகிறது.

எனவே கோத்தகிரி காவல்துறையினர் மூலம் சமவெளிப் பகுதிகளில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலா வாகன ஓட்டிகளுக்கு மலைப்பாதையில் எவ்வாறு பயணத்தை மேற்கொள்ள வேண்டும் எனவும், மலைப்பாங்கான இடங்களில் கட்டாயம் வாகனத்தை இரண்டாவது கியரில் இயக்க வேண்டும்,இரவு நேரங்களில் பயணிக்கும் போது வாகனங்களை வனப்பகுதியில் நிறுத்த கூடாது,சாலையில் உலா வரும் வனவிலங்குகளை புகைப்படம் எடுத்து தொந்தரவு செய்யக்கூடாது,மலைப்பாதையில் அமைக்கப்பட்டுள்ள சாலைவிதி குறியீடுகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என கோத்தகிரி போக்குவரத்து ஆய்வாளர் சரவணனக்குமார்,சிறப்பு சார்பு உதவி ஆய்வாளர்கள் ஜான், ராஜேந்திரன்,காவலர் அப்பாஸ் மூலம் உள்ளூர் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு விழிப்புணர்வு செய்யப்பட்டது.

Related Stories: