நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், இன்று காலை பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் ஆய்வு செய்தார். இங்கு ரூ.2 கோடியில் சாலை விரிவாக்கம் பணிகள் மற்றும் நடை பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பணிகளையும் அவர் ஆய்வு செய்தார். பின்னர் பெதஸ்தா வணிக வளாகம், அந்த பகுதியில் உள்ள குளத்தை பார்வையிட்டார். குளத்தை தூர்வாரி பூங்காவும் அமைக்கப்பட உள்ளது. பின்னர் அந்த பகுதியில் நடை பாதைகளில் வாகனங்கள் நின்றன. அந்த வாகனங்களை அகற்றும்படி மேயர் உத்தரவிட்டார்.