செம்மன்வயல் ரோடு பணியர் காலனியில் பாதியில் நிற்கும் தொகுப்பு வீடுகள் கட்டுமான பணி

பந்தலூர் : பந்தலூர் அருகே மேங்கொரேஞ் செம்மன்வயல் ரோடு குஞ்ஞான் பணியர் ஆதிவாசி காலனியில் பாதியில் நிற்கும் தொகுப்பு வீடுகள் கட்டுமான பணியில் மக்களுக்கு குடியிருப்பதற்கு முறையான வீடுகள் இல்தாமல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லியாளம் நகராட்சிக்குட்பட்ட மேங்கொரேஞ் அருகே செம்மண் வயல் ரோடு குஞ்ஞான் பணியர் ஆதிவாசி காலனியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குடியிருப்பதற்கு  முறையான வீடுகள் இல்லாமல் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில் அரசின் பசுமை வீடுகள் திட்டத்தின் மூலம் தங்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கவேண்டும் என அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார்கள் தெரிவித்து வந்தனர்.

 அதன்படி ஒரு சிலருக்கு அரசின் தொகுப்பு வீடுகள் கட்டுமான பணிகள் துவங்கிய நிலையில் சில வீடுகள் அடித்தளம் அமைத்தவாரும், சுவர் எழுப்பப்பட்டும் பாதியில் பணி நிற்கிறது. பல மாதங்களாக பணிகள் முழுமை பெறாமல் கிடப்பில் இருந்து வருவதால் ஆதிவாசி மக்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார்கள் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆதிவாசி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

புதிய வீடுகள் கட்டுவதால் குடியிருந்து வந்த வீடுகளை உடைத்து  தற்காலிக வீடுகள் அமைத்து கூரைகளுக்கு பிலாஸ்டிக் பைகளை போர்த்தி தற்போது குடியிருந்து வருகின்றனர். மழைக்காலங்களில் குடியிக்கும்  வீடுகளுக்குள்  மழைநீர் புகுந்து சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும்  என ஆதிவாசி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: