காஞ்சிபுரம் ஜோஸ் ஆலுக்காசில் பிக் ஜூவல்லரி ‘சேல் ஆபர்’ விழா

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், குமரகோட்டம் அருகில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில், பிக் ஜூவல்லரி சேல் ஆபர் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது. இதற்கான தொடக்க விழா  மேற்கு ராஜ வீதியில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, ஜோஸ் ஆலுக்காஸ் காஞ்சிபுரம் கிளை மேலாளர் தேவராஜ் தலைமை தாங்கினார். துணை மேலாளர் பிரவீன் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக காஞ்சிபுரம் கோமதி சில்க்ஸ் உரிமையாளர்கள், தாமோதரன், லலிதா தாமோதரன் ஆகியோர் குத்து விளக்கேற்றி சிறப்பு விற்பனையை தொடங்கி வைத்தனர். இந்த, சிறப்பு விற்பனையை முன்னிட்டு டிரெண்டிங் டிசைன்கள், புத்தம் புதிய கலெக்ஷன்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சேதாரத்தில் 50 சதவீத தள்ளுபடியுடன் வழங்கப்படுகிறது. இவ்விழாவில் அலுவலக மேலாளர் ஹரி நாராயணன் மற்றும் ஏராளமான வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: