வாலாஜாபாத்: தேவரியம்பாக்கம் ஊராட்சியில், குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. வாலாஜாபாத் ஒன்றியம், தேவரியம்பாக்கம் ஊராட்சியில் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் அஜய்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் களப்பணி அலுவலர் சுசீலா முன்னிலை வகித்தார். இதில், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, குழந்தை கடத்தல், சட்டத்திற்கு புறம்பாக குழந்தைகளை தத்து கொடுப்பது குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.