கடம்பத்தூர் ஒன்றியத்தில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட தேர்வு

திருவள்ளூர்:  திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மூலம் புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட கற்றோருக்கான அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு நேற்று நடைபெற்றது.  இந்த திட்டத்தின் மூலம் கல்வி பயின்று வரும் 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுதப்படிக்க தெரியாதவர்களான 1,250 பேருக்கு, 80 தேர்வு மையங்களில் தன்னார்வலர்கள் மூலம் நேற்று தேர்வு நடந்தது.

இதில் துவக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் முதன்மைக் கண்காணிப்பாளர்களாக பணி மேற்கொண்டனர். தேர்வு மையங்களை திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமன், கூடுதல் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர், மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர், வட்டார வள மைய மேற்பார்வையாளர்,  வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

Related Stories: