கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பெட்ரோல் பங்க் பின்புறம் அமராவதி ஆற்றுப் படுகையில் தீ விபத்து

கரூர்: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருமாநிலையூரில் பெட்ரோல் பங்க் பின்புறம் அமராவதி ஆற்றுப் படுகையில் காய்ந்து கிடந்த முட்செடிகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். கரூர் மாவட்டம் காந்தி கிராமம் பகுதியை சேர்ந்தவர் மலையப்பசாமி, இவருக்கு சொந்தமாக கரூர் - திருச்சி சாலை சுங்ககேட்டில்  பெட்ரோல் பங்க் உள்ளது.

இந்த பெட்ரோல் பங்குக்கு பின்புறம், அமராவதி ஆற்றின், கரையோர பகுதிகளில் முளைத்திருந்த, அதிகப்படியான சீமை கருவேல மரஙகள் சமீபத்தில் வெட்டப்பட்டன. காய்ந்த நிலையில் இருந்த, சீமை கருவேல மரங்களில் நேற்றிரவு, திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, தீ துகள்கள் பெட்ரோல் பங்குக்கு பரவின. இதனால், பெட்ரோல் பங்கில் இருந்த, ஊழியர்கள் அனைவரும் வெளியேறினர். தகவல் அறிந்த, கரூர் தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து சென்று, சீமை கருவேல மரங்களில் பிடித்த தீயை அணைத்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: