சென்னை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை சீராக உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா உயிரிழந்ததையடுத்து அந்த சட்டமன்ற தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி கட்சி, காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார். இந்நிலையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜூனா கார்கே, ராகுல்காந்தியிடம் வாழ்த்து பெறுவதற்காக இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்லி புறப்பட்டு சென்றார். அங்கு மல்லிகர்ஜுனா கார்கே, கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.