வங்கிகள் நியாயமாக செயல்படுவதில்லை மோசடி நபர்களுக்கே கடன்: ஐகோர்ட் கிளை நீதிபதிகள் வேதனை

மதுரை: ‘திருப்பி செலுத்துவோருக்கு வங்கிகள் கடன் கொடுப்பதில்லை. மோசடி நபர்களுக்கே கடன் வழங்கப்படுகிறது’ என ஐகோர்ட் கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர், வங்கி கடன் தொடர்பான பல வழக்குகளை நேற்று விசாரித்தனர். அப்போது நீதிபதிகள், வங்கி கடனை முறையாக செலுத்துவோர் கடன் கேட்டால் கொடுப்பதில்லை. மாறாக மோசடி செய்யும் நபர்களுக்கு அதிகளவில் கடன்கள் வழங்கப்படுகிறது. வங்கி மேலாளர்கள் இவர்களுடன் கூட்டு சேர்கின்றனர். பல வங்கிகள் நியாயமான  முறையில் செயல்படுவதில்லை. கடன் பெற்றவர்கள் குறிப்பிட்ட தொகையை செலுத்த  தயாராக இருந்தாலும், வங்கி தரப்பில் அனுமதிப்பதில்லை. அதே நேரம் பெரிய  நிறுவனத்தினர் பாதி கடனை செலுத்த முன்வந்தாலே ஏற்றுக்கொள்கின்றனர். அவர்களுக்கென தனி சட்டம் உள்ளதா எனத் தெரியவில்லை. இவர்களுக்கு சாதகமாகவும்  சட்டம் கொண்டு வரப்படுகிறது என தங்களது வேதனையை தெரிவித்தனர்.    

Related Stories: