பங்குனி மாத பூஜைகளுக்காக நடை திறப்பு சபரிமலையில் பக்தர்கள் குவிந்தனர்

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி மாத பூஜைகள் நேற்று (15ம் தேதி) தொடங்கியது. இதையொட்டி கோயில் நடை நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. அன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், நெய்யபிஷேகம் உள்பட வழக்கமான பூஜைகள் தொடங்கின.  வரும்  19ம் தேதி இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். அன்றுடன் பங்குனி மாத பூஜைகள் நிறைவடையும்.

மீண்டும் பங்குனி உத்திர திருவிழாவுக்காக வரும் 26ம் தேதி மாலை சபரிமலை கோயில் நடை திறக்கப்படும். 27ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது. ஏப்ரல் 5ம் தேதி பிரசித்தி பெற்ற ஆராட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்றுடன் 10 நாள் திருவிழா நிறைவடையும்.  ஆன்லைனில் முன்பதிவு செய்து வரும் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி உண்டு. ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியாதவர்களுக்காக நிலக்கலில் உடனடி முன்பதிவு கவுண்டர் திறக்கப்பட்டுள்ளது.

Related Stories: