சென்னை: தமிழ்நாட்டில் நேற்றைய மின் நுகர்வு 17,705 மெகாவாட் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் தற்போதைய மின் தேவை 16,500 மெகாவாட்டில் இருந்து 17,500 மெகாவாட் வரை உள்ளது. இது வரும் ஏப்ரல் மாதத்தில் மேலும் அதிகரித்து 17,000 மெகாவாட்டில் இருந்து 18,100 மெகாவாட் ஆக அதிகரிக்கலாம் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் நேற்று மின்சார பயன்பாடு உச்சத்தை தொட்டுள்ளது. இதுகுறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தமிழ்நாட்டில் நேற்றைய மின் நுகர்வு 17,705 மெகாவாட் என்று கூறியுள்ளார். நேற்றைய மின்தேவை எந்த தடையுமின்றி ஈடுசெய்யப்பட்டதாக தெரிவித்திருக்கிறார்.
