சவப்பெட்டிகளுடன் கவர்னர் மாளிகை நோக்கி 17ல் ஊர்வலம்

அருப்புக்கோட்டை: மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ அருப்புக்கோட்டையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழ்நாட்டு மாணவர்கள் மீது நீட் திணிக்கப்பட்டதை கண்டித்து உயிரை மாய்த்துக் கொண்ட அனிதாவின் பெயர் அரசு  மருத்துவக்கல்லூரியில் கட்டப்படும் புதிய அரங்கத்திற்கு சூட்டப்படும் என அறிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை மனதார வரவேற்கிறேன். ஆன்லைன் ரம்மியால் பாதிக்கப்பட்டு ஏறத்தாழ 44 பேர் உயிரை மாய்த்த பிறகும் கூட, கவர்னர் கையொப்பமிட மறுத்து இருக்கிறார். ஆன்லைன் ரம்மி தடை மசோதா உட்பட 21 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருக்கக்கூடிய கவர்னரை கண்டித்து மார்ச் 17ம் தேதி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் சவப்பெட்டிகளுடன் கவர்னர் மாளிகையை நோக்கி ஊர்வலம் போராட்டம் நடத்தப்பட உள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: