அன்னமய்யா மாவட்டத்தில் 13 செம்மரக்கட்டைகள் பறிமுதல்-அதிரடிப்படை போலீசார் அதிரடி

திருமலை : அன்னமய்யா மாவட்டத்தில் அதிரடிப்படை போலீசார் 13 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர்.அன்னமய்யா மாவட்டம், பாலப்பள்ளி வனச்சரகத்தில் 13 சிவப்பு செம்மரக்கட்டைகளை அதிரடிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். அதிரடிப்படை எஸ்பி கே.சக்கரவர்த்தி உத்தரவின்படி, டிஎஸ்பி முரளிதர் மேற்பார்வையில். ஆர்.ஐ.சுரேஷ் குமாரின் குழுவினர் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர்.

பின்னர், நேற்று காலை திருமலைக்கு சென்று அங்கிருந்து அன்னதம்முலா பண்டா வழியாக அன்னமய்யா மாவட்டத்தின் பாலபள்ளி மலைத்தொடரை அடைந்தனர்.

அப்போது, அதிகாலை 3 மணியளவில் கங்குமடுகு என்ற இடத்தில் சிலர் செம்மரக் கட்டைகளை எடுத்துச் செல்வதை பார்த்தனர்.பின்னர், அவர்கள் மீது டார்ச்லைட்களை அடித்து, சரணடையுமாறு போலீசார் எச்சரித்து அவர்களை சுற்றி வளைக்க முயன்றனர்.

ஆனால், அவர்கள் மரக்கட்டைகளை கீழே போட்டுவிட்டு இருட்டில் புதர்கள் வழியாக தப்பி ஓடினார்கள். மேலும், அப்பகுதியில் போலீசார் சோதனை செய்தபோது 13 செம்மரக் கட்டைகள் கண்டெடுக்கப்பட்டது.  அவற்றை பறிமுதல் செய்த நிலையில், திருப்பதி அதிரடிப்படை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: