செங்கல்பட்டு: செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்ற நுழைவாயில் பகுதியில், ஜிஎஸ்டி சாலையில் அமர்ந்து பெண் ஒருவர் தர்ணாவில் ஈடுபட்டார். அதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்ற நுழைவாயில் பகுதியில், ஜிஎஸ்டி சாலையில் அமர்ந்து பெண் ஒருவர் தர்ணாவில் ஈடுபட்டார். அதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்த போலீசார் மற்றும் வழக்கறிஞர்கள் அப்பெண்ணிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அவர், தனது வழக்கறிஞர் எனது வழக்கை நடத்தாமல் எதிர் தரப்பிற்கு சாதகமாக உள்ளதாக தெரிவித்தார்.
இதையடுத்து, வழக்கறிஞர்கள் இலவச சட்ட உதவி மையம் அல்லது பார் கவுன்சில் மூலம் பேசி தீர்வு காணுங்கள் என, அப்பெண்ணிடம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, அவர் தர்ணாவை கைவிட்டார். தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அவர் சென்னை ஆலந்தூர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மனைவி ரதிதேவி என்றும், தனது குடும்ப வழக்கு தொடர்பான வழக்கை நடத்தாமல் வழக்கறிஞர் காலம் தாழ்த்துவதாகவும், எதிர்தரப்பான முன்னாள் கவுன்சிலர் பாபுமுருகனுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் தெரிவித்தார். பெண் நீதிமன்ற நுழைவாயில் பகுதியில், ஜிஎஸ்டி சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.மேலும் ஜிஎஸ்டி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.