கரூர் சேர்மன் ராமானுஜம் தெருவில் வடிகாலில் அடைப்பால் தேங்கிய கழிவுநீர்-துர்நாற்றத்தால் மக்கள் அவதி

கரூர் : கரூர் சேர்மன் ராமானுஜம் தெருவில் உள்ள வடிகாலில் ஏற்பட்ட அடைப்பை விரைந்து சரி செய்ய வேண்டும் என இந்த பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.கரூர் மாநகராட்சிக்குட்பட்ட மையப்பகுதிகளில் சேர்மன் ராமானுஜம் தெருவும் ஒன்றாக உள்ளது. நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் இந்த பகுதியில் உள்ளன. இந்நிலையில், இந்த தெருவில் உள்ள பகுதியில் சாக்கடை வடிகாலில் அடைப்பு ஏற்பட்டு, கழிவு நீர் தேங்கி கடும் துர்நாற்றம் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

அடைப்பின் காரணமாக, துர்நாற்றம் மற்றும் கொசு உற்பத்தி போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என்பதால் இந்த பிரச்னைக்கு முற்று வைக்கும் வகையில், இந்த அடைப்பினை விரைந்து சரி செய்து, எளிதாக கழிவு நீர் செல்லும் வகையில் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என இந்த பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியில் ஏற்பட்டுள்ள அடைப்பினை விரைந்து சரி செய்ய தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Related Stories: