நசுவினி ஆற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்ட நடவடிக்கை: 10 ஆண்டு கோரிக்கை நிறைவேறுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே நசுவினி ஆற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு விவசாயிகள் நன்றியை தெரிவித்துள்ளனர். அதிராம்பட்டினம் அருகே உள்ள முடுக்காடு, கரிசக்காடு, கருங்குளம் ஆகிய மூன்று கிராமங்கள் கடற்கரை சார்ந்த பகுதிகளாக உள்ளன. இதனால் குடிநீர் மற்றும் பாசனத்திற்கு போதிய தண்ணீர் கிடைக்காமல் கிராம மக்களும், விவசாயிகளும் தவிப்புக்கு உள்ளாகினர்.

தங்கள் பிரச்சனைக்கு தீர்வு காண நசுவினி ஆற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்ட வேண்டும் என்று அரசிடம் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று புதிய தடுப்பணை கட்ட அரசு ரூ.4,36 கோடியை ஒதுக்கியது. அதற்கான பூர்வாங்க பணிகளும் தொடங்கியுள்ளன. இதற்கு விவசாயிகள் அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். புதிய தடுப்பணை மூலம் 1500 ஏக்கர் நிலங்கள் பயன்பெறுவதோடு குடிநீர் பிரச்னையும் தீரும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: