கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால் தென் மாவட்டங்களில் மார்ச் 15 வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை: கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால் தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மார்ச் 15 வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், அதனையொட்டிய மாவட்டங்கள், காரைக்காலில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

சென்னையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணடப்படும், அதிகபட்ச வெப்பநிலை அதிகபட்சம் 33 டிகிரி குறைந்தபட்சம் 22 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மீனவர்களுக்காக எச்சரிக்கை:

மன்னவர் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமாரி கடல் பகுதியில் சூறைக்காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசும் என்பதால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related Stories: