திருவள்ளூர்: பூந்தமல்லி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வெள்ளவேட்டில் நடைபெற்றது. விழாவிற்கு ஒன்றிய செயலாளரும், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவருமான டி.தேசங்கு தலைமை தாங்கினார். நகர செயலாளர் ஜி.ஆர்.திருமலை, ஒன்றிய குழு துணைத் தலைவர் பரமேஸ்வரி கந்தன், ஒன்றிய நிர்வாகிகள் இ.கந்தபாபு, சி.அண்ணாகுமார், ஜே.சாக்ரடீஸ், ஜி.சுகுமார், ப.கந்தன், எம்.குணசேகரன், ஜிசிசி.கருணாநிதி, இவிபி.பிரதீப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் சுமதி விஜயகுமார், கே.கோபிநாத், காந்திமதி கேசவன், பி.சி.மூர்த்தி, என்.முனுசாமி, கே.வெங்கடேசன், விஜயகுமார், ஜி.பலராமன், எம்.மோகன், ஜே.ராஜேஷ், அண்ணாமலை ஆகியோர் வரவேற்றனர்.
பூந்தமல்லி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் முதலமைச்சர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்: அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
- பூந்தமல்லி
- மேற்கு ஒன்றியம்
- திமுக
- அமைச்சர்கள்
- பிறந்தநாள் பொதுவுடைமைக் கூட்டம்
- அமைச்சர்
- ஆவதி முதல்வர் நாசர்
