என்எல்சிக்கு எதிராக போராட்டம் அதிமுக எம்எல்ஏ கைது

சேத்தியாத்தோப்பு: என்எல்சிக்கு எதிராக போராட்டம் நடத்திய அதிமுக எம்எல்ஏ அருண்மொழித்தேவன் உள்பட 50 பேரை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள என்எல்சி நிறுவனம் சுரங்க விரிவாக்கத்திற்காக வளையமாதேவி உள்ளிட்ட பகுதிகளில் நிலங்களை கையகப்படுத்தி சமன் செய்யும் பணியை நேற்று இரண்டாம் நாளாக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் என்.எல்சி நிர்வாகம் துவங்கியது. இதனையறிந்து அங்கு சென்ற புவனகிரி அதிமுக எம்எல்ஏ, என்.எல்.சி அதிகாரிகளிடம் பணியை நிறுத்துமாறு கூறினார். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த எஸ்பி ராஜாராம் பேச்சு நடத்தினார். பின்னர் எம்எல்ஏ மற்றும் 50 அதிமுகவினர் சாலையில் அமர்ந்து கண்டன கோஷங்களை எழுப்பியவாறு போராட்டம் நடத்தினர். உடனே போலீசார் அனைவரையும் கைது செய்து அருகே உள்ள திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்று அடைத்து வைத்தனர். இதற்கிடையே, எம்.எல்.ஏவை விடுதலை செய்யக்கோரி விருத்தாச்சலம் - புவனகிரி நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டவர்களையும், போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். அதிமுக எம்எல்ஏவின் கைதுக்கு எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்து உள்ளார்.  

Related Stories: