நோன்புக்கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு 6,500 மெட்ரிக் டன் பச்சரிசி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: நோன்புக்கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு 6,500 மெட்ரிக் டன் பச்சரிசி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 2023-ல் ரமலான் நோன்பு கடைபிடிக்கப்படும் நாட்களில் பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி வழங்கப்படும். இஸ்லாமிய மக்களிடம் இருந்து வந்த கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.   

நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க ஒவ்வொரு ஆண்டும் கடந்த ஆண்டுகளைப் போலவே, 2023 ஆண்டிலும் ரமலான் பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்க வேண்டும் என்று இஸ்லாமிய மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

2023 ஆண்டு ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு பள்ளிவாசல்களுக்கு ஏதுவாக நோன்பு அனுமதியின்கீழ் கடைபிடிக்கப்படும் நாட்களுக்கு மட்டும் பச்சரிசி வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

பள்ளிவாசல்களுக்குத் தேவைப்படும் அரிசிக்கான மொத்த அனுமதியை வழங்க மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்குத் தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி, 6,500 மெட்ரிக் டன் அரிசி மொத்த அனுமதி மூலம் பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும். இதனால், அரசுக்கு 25 கோடியே 63 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: