குடியரசு தலைவர் மாளிகையில் ஆஸ்திரேலிய பிரதமர் அல்பானீஸ்க்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு

டெல்லி: குடியரசு தலைவர் மாளிகையில் ஆஸ்திரேலிய பிரதமர் அல்பானீஸ்க்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. குடியரசு தலைவர் மாளிகையில் பாரம்பரிய முறை அடிப்படியில் ஆஸ்திரேலிய பிரதமருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தனர். அல்பானீக்கு ஒன்றிய அமைச்சர்கள், அதிகாரிகளை பிரதமர் நரேந்திரமோடி அறிமுகம் செய்து வைத்தார்.

ஆஸ்திரேலிய அதிகாரிகளை பிரதமர் நரேந்திரமோடிக்கு ஆஸ்திரேலிய பிரதமர் அறிமுகம் செய்து வைத்தார். இந்த பிரதமர் மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் அல்பானீக்கும் இடையே நடைபெறும் பேச்சு வார்த்தையில் வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு துறைகளில் ஒத்துழைப்பு பற்றி விவாதிக்க உள்ளது. 4 நாள் அரசு பயணமாக இந்தியா வந்துள்ள அல்பானீஸ் தற்போது டெல்லியில் உள்ள அதிகாரிகளிடம் அறிமுகம் செய்து வைத்து வருகிறார்

டெல்லியில் உள்ள ராஜ்காட்டில் மகாத்மா காந்திக்கு ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் சிறந்த நண்பர்கள். நாங்கள் பங்காளிகள், ஒவ்வொரு நாளும் அந்த கூட்டாண்மையை இன்னும் வலுவாக உருவாக்கி வருகிறோம் என்று டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் கூறினார்.

டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கவுரவ காவலர்களை ஆய்வு செய்தார். உலகின் தலைசிறந்த கிரிக்கெட் களத்தில் நாங்கள் போட்டியிடுகிறோம், ஆனால் ஒன்றாக இணைந்து சிறந்த உலகை உருவாக்குகிறோம் டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கூறினார். இந்தியாவுடன் ஒத்துழைத்து கலாச்சாரம், பொருளாதார உறவுகள் மற்றும் பாதுகாப்புத் துறையில் உறவை உருவாக்க விரும்புகிறோம் என்று ஆஸ்திரேலிய பிரதமர் கூறியுள்ளார்.

Related Stories: