பீகார் மாநிலம் கயா பகுதியில் ராணுவத்தினர் நடத்திய பயிற்சியில் ஷெல் குண்டு வீட்டுக்குள் பாய்ந்து 3 பேர் உயிரிழப்பு

பீகார்: கயா பகுதியில் ராணுவத்தினர் நடத்திய பயிற்சியில் ஷெல் குண்டு வீட்டுக்குள் பாய்ந்து 3 பேர் உயிரிழந்தனர். குலர்வெத் கிராமத்தில் உள்ள வீட்டுக்குள் ஷெல் குண்டு பாய்ந்ததில் 3 பேர் பலியாகிய நிலையில் பலர் படுகாயமடைந்துள்ளனர். பீகார் மாநிலம் கயா பகுதியில் இந்திய ராணுவத்தினர் நடத்திய பயிற்சியில் மோர்டார் ஷெல் குண்டுகள் இலக்கு தவறி அங்குள்ள வீடு ஒன்றின் மீது பாய்ந்து வெடித்துள்ளது. இந்த சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் ஒரு இளம் ஜோடி மற்றும் அண்டை வீட்டார் ஒருவர் இறந்துள்ளனர்.

ஷெல் வீட்டின் முற்றத்தில் விழுந்ததில் மேலும் இருவர் காயமடைந்தாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள கயா மாவட்டத்தில் உள்ள குல்வரேட் என்ற கிராமத்திற்கு, “ஹோலி” பண்டிகையை கொண்டாட தம்பதியினர் சென்றிருந்ததாக, மாநில அதிகாரி பங்கஜ் குமார் தெரிவித்தார். இந்த கிராமம் மாநில தலைநகரான பாட்னாவிற்கு தெற்கே 120 கிலோமீட்டர் (65 மைல்) தொலைவில் ராணுவ துப்பாக்கி சூடு எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து ராணுவம் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இதுபோன்று விபத்துக்கள் கடந்த வருடத்தில் இராணுவ தளத்திற்கு அருகில் பதிவாகியுள்ளன என கூறப்படுகிறது.

அதாவது, கடந்தாண்டு இதே பகுதியில் குண்டு பாய்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். அவர் விற்பனை செய்வதற்காக பித்தளையை அகற்ற முயன்றபோது ஷெல் வெடித்தது என ஊடக அறிக்கைகள் தெரிவித்தன. டிசம்பரில் நடந்த மற்றொரு சம்பவத்தில், சமையலுக்கு பயன்படுத்துவதற்கும், விற்பனை செய்வதற்கும் சுடுகாட்டுக்கு அருகில் விறகுகளை சேகரித்தபோது, ஷெல் குண்டுகள் வெடித்து குறைந்தது 10 பேர் காயமடைந்தனர் எனவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.

Related Stories: