மூணாறு சாலையில் வாகனங்களை வழிமறிக்கும் ‘படையப்பா’-வனப்பகுதிக்குள் விரட்ட கோரிக்கை

மூணாறு : கேரள மாநிலம், மூணாறு பகுதியில் படையப்பா என்ற காட்டுயானை மக்களிடையே மிகவும் பிரபலமானது. இது மூணாறு மற்றும் சுற்றுப்புற எஸ்டேட் பகுதிகளில் அடிக்கடி சாலையோரங்களிலும், குடியிருப்பு பகுதிகளிலும் ஹாயாக உலா வருகிறது. குறிப்பாக மாட்டுப்பட்டி, எக்கோ பாயின்ட், பாலாறு உள்ளிட்ட இடங்களில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் புகுந்து, ஏராளமான சாலையோர கடைகளை அடித்து நொறுக்குவதை வழக்கமாக வைத்துள்ளது.

நேற்று மூணாறு - மறையூர் சாலையில் நாயமக்காடு எஸ்டேட் அருகே மூணாறில் இருந்து உடுமலைபேட்டை சென்ற கேரள அரசு பஸ்சை, காட்டு யானை வழிமறித்தது. இதில் தந்தத்தால் முட்டி தாக்கியதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி சேதமடைந்தது. ஆனால் ஓட்டுனர் சிறிதும் அச்சப்படாமல் சாதுர்யமாக பஸ்சை இயக்கி கடந்து சென்றார். இதனால் சாலையோரங்களில் சுற்றித்திரியும் இந்த யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்துள்ளது.

Related Stories: