சிறந்த மாவட்ட ஆட்சியர் விருது பிரிவில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு முதல் பரிசு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.!

சென்னை: சிறந்த மாவட்ட ஆட்சியர் விருது பிரிவில் திருவள்ளூருக்கு முதல் பரிசை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா நடைபெற்று வருகிறது. ம.இளம்பிறைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெண் குழந்தை விருது வழங்கினார். மகளிருக்காக சிறப்பாக செயல்பட்ட 3 மாவட்ட ஆட்சியர்களுக்கும் விருது வழங்கப்பட்டது. சென்னையில் சமூக நலத்துறை சார்பில் நடந்து வரும் சர்வதேச மகளிர் தின விழாவில் முதலமைச்சர் முக ஸ்டாலின் கலந்துகொண்டு பல்வேறு விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறார்.

சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் ஒளவையார் உள்ளிட்ட விருதுகளைய் வழங்கி கவுரவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின். மேலும், சிறந்த மாவட்ட ஆட்சியர் விருது பிரிவில் திருவள்ளூருக்கு முதல் பரிசை வழங்கினார் முதலமைச்சர். இதுபோன்று,, நாகை மாவட்ட நிர்வாகத்துக்கு இரண்டாம் பரிசும், நாமக்கல் மாவட்ட நிர்வாகத்துக்கு மூன்றாம் பரிசும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: