தாளவாடி அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்று வழிபடும் கோயில் திருவிழா: 18 கிராம பழங்குடியின மக்கள் திரளாக பங்கேற்று தரிசனம்

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே மல்லிகார்ஜுன சாமி கோயிலில் குண்டம் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலை பகுதி கொங்கு அள்ளி என்ற வனத்தில் 3 மலைகளுக்கு நடவே பாறை குகையில் உள்ள மல்லிகார்ஜுன சாமி கோயில் குண்டம் விழா நடைபெற்றது.

லிங்காயத்து பழங்குடியின மக்களுக்கு சொந்தமான கோயிலில் 18 கிராமங்களை சேர்ந்த பழங்குடியின ஆண்கள் மட்டுமே பங்கேற்றனர். பூசாரி மட்டுமே குண்டம் இறங்கினார். நந்தவன தோப்பில் இருந்து மேளதாளத்துடன் சாமி ஆபரணங்கள் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது பெண்கள் நுழைய கூடாது என்பதால் 2 கிலோ மீட்டர் தூரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டன. பெண்கள் ஊருக்கு வெளியே உள்ள நந்தவனம் தோப்பில் வழிப்பட்டனர்.  

Related Stories: