தமிழ்நாட்டில் பாஜ பொய் பிரசாரம் அரைவேக்காடு அண்ணாமலை: நாராயணசாமி ஆவேசம்

புதுச்சேரி: புதுச்சேரி  முன்னாள் முதல்வர் நாராயணசாமி நேற்று அளித்த பேட்டி: ஒன்றியத்திலும், புதுச்சேரி மாநிலத்திலும் பாஜ ஊழல்  நிறைந்த ஆட்சி நடத்தி வருகிறது. சமீபத்தில் கர்நாடகாவில்  பாஜ எம்எல்ஏ அலுவலகத்தில் இருந்து ரூ.6 கோடியை லோக் ஆயுக்தா கைப்பற்றி  இருக்கிறது. எம்எல்ஏவின் மகன் ரூ.45 லட்சம் லஞ்சம் வாங்கும் போது  பிடிபட்டுள்ளார். இதுபோன்று பாஜ ஆளும் மாநிலங்களில் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது.

தமிழகம், புதுச்சேரியில் வதந்தி பரப்புகின்ற கட்சியாக பாஜ இருக்கிறது. தவறான செய்திகளை பரப்பி தமிழகத்தில் கலவரத்தை  உருவாக்க தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை வேலை பார்க்கிறார். தமிழகத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு  பாதுகாப்பு இல்லை என கூறியிருப்பதால் அண்ணாமலை ஒரு அரைவேக்காடு அரசியல்வாதி என்பது தெளிவாக  தெரிகிறது. பொய்யை  மூலதனமாக வைத்து அரசியல் செய்கிற பாஜவுக்கு தமிழ்நாடு மக்கள் சவுக்கடி  கொடுப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: