வெளிமாநில தொழிலாளர்களை தமிழ்நாடு தொழிலாளர்களாக பாவித்து வருகிறோம்: அமைச்சர் சி.வி.கணேசன் பேட்டி

திருச்சி: வட மாநிலத் தொழிலாளர்களுக்கு முழு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் சி.வி.கணேசன் பேட்டியளித்துள்ளார். 6 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தமிழகத்தில் பணியாற்றுகிறார்கள். வெளிமாநில தொழிலாளர்களை தமிழக தொழிலாளர்களாக பாவித்து வருகிறோம். ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் தொழிலாளர்களுக்கு வசதிகள் செய்து தந்துள்ளோம் என்று அமைச்சர் சி.வி.கணேசன் கூறியுள்ளார்.

வடமாநில தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது. மாவட்ட காவல்துறையுடன் இணைந்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோயம்பேடு மட்டுமில்லாமல் அம்பத்தூர், ஆவடி, பழைய மகாபலிபுரம் சாலை ஆகிய பகுதிகளில் ஓட்டல்கள், கட்டுமான துறையில் சுமார் 4 லட்சம் வடமாநிலத்தவர்கள் பணியாற்றி வருகின்றனர். சென்னை கோயம்பேட்டில் மட்டும் 4 ஆயிரம் வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள்.

கோயம்பேட்டில் சரக்குகளை கையாளும் பணியில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில் பீகார், மத்தியபிரதேசம், ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து வடமாநில தொழிலாளர்கள் சென்னை கோயம்பேடு, பழம், காய்கனி அங்காடியில் சுமார்  3,000 முதல் 4,000 வரை வேலை செய்து வருகிறார்கள். தமிழகத்தில் பாதுகாப்புடன் தான் இருக்கிறோம் என்று வடமாநில தொழிலாளர்கள் கூறியுள்ளனர்.

தமிழகத்தில் எந்த பிரச்சையுமின்றி வாழ்கிறோம் என்று வடமாநில தொழிலார்கள் கூறியுள்ளனர். கோவை மாவட்டத்தில் பொறியியல் துறையில் மட்டும் 2 லட்சம் பேர் பணியாற்றுகிறார்கள். மொத்தமாக 5 லட்சம் வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். கோவையில் அதிக அளவில் வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள்.

Related Stories: