நியூசிலாந்தில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 6.6ஆக பதிவு.! சேத பாதிப்பு பற்றிய எந்த விபரமும் இன்னும் வெளியாகவில்லை

நியூசிலாந்து: நியூசிலாந்தில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6ஆக பதிவாகியுள்ளது. ஆக்லாந்தின் வடகிழக்கு பகுதியில் இருந்து 990 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. துருக்கி, சிரியாவை தொடர்ந்து தற்போது நிலநடுக்கங்கள் அதிகமாக ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் தான் நியூசிலாந்தின் கெர்மடெக் தீவில் இன்று திடீரென்று பூமி குலுங்கி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 6.9 என பதிவானதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நியூசிலாந்தின் கெர்மடெக் தீவுகள் உள்ளன. இந்நிலையில் இன்று கெர்மடெக் தீவு பகுதியில் திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 6.9 என்ற ரிக்டர் அளவில் பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிர்ஷ்டவசமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. மேலும் சேத பாதிப்பு பற்றிய எந்த விபரமும் இன்னும் வெளியாகவில்லை.

Related Stories: