சென்னையில் ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்த ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

சென்னை: சென்னையில் ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்த ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சேலையூர் அடுத்த மாடம்பாக்கத்தை சேர்ந்த மருந்து விற்பனை பிரதிநிதி வினோத்குமார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையான நிலையில், பல லோன் ஆப்களில் 20 லட்சம் வரை கடன் வாங்கி விளையாடி வந்துள்ளார்.

கடன் கொடுத்த லோன் ஆப்கள் தரப்பில் வந்த நெருக்கடி மற்றும் பணத்தை இழந்த வேதனையில் தனிமையில் இருந்து வந்த நிலையில் வினோத்குமார் தற்கொலை செய்து கொண்டுள்ளார். வினோத்குமாரின் உடலை கைப்பற்றி சேலையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தால் இதுவரை 40க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

Related Stories: