ஆந்திர மாநிலத்தில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட நபர் கைது

கூடலூர்: ஆந்திர மாநிலம் அனுக்காபள்ளி பகுதியில் கஞ்சா வியாபாரத்தில் ரூ.24 ஆயிரம் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டதாக கூடலூரை சேர்ந்த நபரை அம்மாநில காவல்துறையினர் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஆக்ஸிஸ் வங்கி ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் செலுத்தும் இயந்திரத்தில் கடந்த மாதம், 12ம் தேதி, ரூ.24 ஆயிரம் கள்ள நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன.

வங்கி அதிகாரிகள் ஆய்வில், இத்தொகை அப்பகுதியை சேர்ந்து கும்மாடி நிரஞ்சன் என்பவர் கணக்கில் செலுத்தப்பட்டது தெரியவந்தது. ஏ.டி.எம் இயந்திரத்தில் கள்ள நோட்டுகள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த வங்கி அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் விசாரித்து, கும்மாடி நிரஞ்சனை கைது செய்தனர். தொடர்ந்து, 20ம் தேதி கடிராமு என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து, 50 ஆயிரும் ரூபாய் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக விசாரணை நடத்தியதில் கஞ்சா வியாபாரத்தின் போது,  நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்த பிஜூ என்பவர் கஞ்சா வாங்குவதற்காக விசாகபட்டினத்தை சேர்ந்த நபருக்கு பணம் அனுப்பியது தெரியவந்தது. ஆந்திர மாநிலத்தில் இருந்து இன்ஸ்பெக்டர்  தலைமையில் தனிப்படை போலீசார், கூடலுார் போலீசார் உதவியுடன் வடவயல் பகுதிக்கு சென்று பிஜூ-வை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி அம்மாநிலத்திற்கு அழைத்து சென்றனர். 

Related Stories: