போதிய பராமரிப்பின்றி புதர் மண்டி கிடக்கும் மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லூரி: அச்சத்துடன் பயிலும் மாணவர்கள்

புதுச்சேரி: புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியில் கடந்த 1961ம் ஆண்டு மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக் கல்லூரி தொடங்கப்பட்டு இன்று வரை சிறப்பாக இயங்கி வருகிறது. இங்கு டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன், கெமிக்கல் இன்ஜினியரிங், கருவி மற்றும் கட்டுப்பாட்டு இன்ஜினியரிங், தகவல் தொழில்நுட்பம், நவீன அலுவலக மேலாண்மை ஆகிய 8 டிப்ளமோ படிப்புகள்  கற்பிக்கப்படுகிறது.  கல்லூரியில் 903 மாணவர்களும், 27 மாணவிகள் என 930 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். 51 பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.  

ஒரு பாடப்பிரிவுக்கான ஆசிரியர்கள், ஆய்வக உதவியாளர்கள் பணி ஓய்வு பெற்று சென்றுவிட்டதால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதில் மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்கல், தகவல் தொழில்நுட்பம் இன்ஜினியரிங் ஆகிய டிப்ளமோ படிப்புகளில் மாணவர்கள் ஆர்வமுடன் சேர்ந்து படித்து வருகின்றனர். இங்குள்ள டிப்ளமோ படிப்பில் சேர்தவதற்கு கடும் போட்டி நிலவுகிறது.  இக்கல்லூரி பழயைான கல்லூரி என்பதால் கட்டிடங்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளது.  இங்குள்ள ஆய்வகங்களின் ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு  அப்படியே கிடக்கிறது. கல்லூரிகளில் போதிய பாதுகாப்பு வசதி இல்லாததால் அடிக்கடி ஆய்வக உபகரணங்கள் கொள்ளை போகும் சம்பவமும் தொடர்ந்து நடந்து வருகிறது. எனவே கல்லூரியின் கட்டிடங்களை சீரமைத்து பராமரிக்க வேண்டும். ஆய்வகங்கள் சுற்றிலும் உள்ள புதர்களை அகற்றி பூங்கா மற்றும் காய்கிற, தோட்டம் அமைத்து பராமரிக்க வேண்டும். கல்லூரிக்கு போதிய பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது. மாணவர்கள் விரும்பும் படிப்புகளுக்கு அதிகளவில் சீட் ஒதுக்கி கல்லூரியை மேம்படுத்த வேண்டுமென கோரிக்கை வைக்கின்றனர்.

இதுகுறித்து கல்லூரி பேராசிரியர்கள் கூறுகையில், புதுச்சேரியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி இது ஒன்று மட்டும் தான் உள்ளது. மகளிர் பாலிக்டெக்னிக், மகளிர் பொறியியல் கல்லூரியாக மாற்றப்பட்டுள்ளது. ஆகையால் இந்தாண்டு மாணவிகள் அதிகளவில் சேர்ந்துள்ளனர். இங்கு அனைத்து துறைகளுக்கும் ஆய்வக வசதி சிறப்பாக உள்ளது.  ஆண்டுதோறும் இங்கு பயிலும் மாணவ, மாணவிகள் 75 சதவீதம் பேர் சென்னை, பெங்களூர், கர்நாடகா, மும்பை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் தனியார் கம்பெனிகளுக்கு நேர்முக தேர்வில் தேர்வாகி வேலைக்கு செல்கின்றனர்.  கடந்த மாதம் கூட எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் துறை மாணவர்கள் ஒரு தனியார் நிறுவனத்துக்கு அதிகளவில் தேர்வாகி சென்றுள்ளனர். புதிய கல்விக்கொள்கைப்படி 4 ஆண்டு டிப்ளமோ படிப்பு கொண்டுவரப்படும்போது, இன்னும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றனர்.

Related Stories: