ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பதிவான 398 தபால் வாக்குகளில் 25 வாக்குகள் செல்லாதவை என அறிவிப்பு..!!

ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பதிவான 398 தபால் வாக்குகளில் 25 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவை தொடர்ந்து அறிவிக்கப்பட்ட ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை பல்வேறு பரபரப்புகளை கடந்து இன்று நடைபெற்று வருகிறது.  இரண்டு அறைகளில் 16 மேஜைகளில் நடக்கும் 15 சுற்று வாக்கு எண்ணிக்கையில் சுமார் 100 ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக பதிவான 398 தபால் வாக்குகள் முதலில் எண்ணப்பட்டு வந்தது. தபால் வாக்குகளில் திமுக கூட்டணியை சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் முன்னிலை வகித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பதிவான 398 தபால் வாக்குகளில் 25 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டுள்ளது. 398 தபால் வாக்குகளில் காங்கிரசுக்கு 250, அதிமுகவுக்கு 104, நாம் தமிழர் கட்சிக்கு 10 வாக்குகள் கிடைத்துள்ளன. சமாஜ்வாதி கட்சி வேட்பாளருக்கு 2 தபால் வாக்குகள் கிடைத்துள்ளன. தேமுதிக வேட்பாளருக்கு ஒரேயொரு தபால் வாக்கு மட்டுமே கிடைத்தது. இடைத்தேர்தலில் போட்டியிட்ட 77 வேட்பாளர்களில் 67 பேருக்கு ஒரு தபால் வாக்கு கூட கிடைக்கவில்லை.

Related Stories: