கோஹிமா : திரிபுராவை தொடர்ந்து நாகாலாந்திலும் பாஜக ஆட்சி அமைகிறது. 60 தொகுதிகள் உள்ள நாகாலாந்தில் அகுலுடோ தொகுதியில் பாஜக வேட்பாளர் கஜேடோ கினிமி போட்டியின்றி தேர்வானார். இதையடுத்து கடந்த பிப்ரவரி 27ம் தேதி 59 தொகுதிகளில் தேர்தல் நடந்தது. இங்கு, ஆளும் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சியுடன் (என்டிபிபி) பாஜ கூட்டணி அமைத்து போட்டியிட்டது. நாகா மக்கள் முன்னணியுடன் (என்பிஎப்) காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. இம்மாநிலத்தில் மொத்தம் 81.94 சதவீத வாக்குகள் பதிவாகின.